கங்காருவின் பூர்வீகம் இந்தியா ??

Is Kangaroo a native of India?
“Yes” says Dr.Philo Irudhayanath in his Tamil book in 1985 named “காட்டில் கண்ட மர்மம் (Mysteries I have seen in forests)”.
Cave drawings by the early man in the “Satpura Caves” contain images of the present day Kangaroo.

ஆதிவாசிகள் காட்டுக்கு வந்தது எப்படி?

If you notice where tribes are concentrated, you can observe that they are commonly found around places where several wars were fought during the ancient times. For eg, foothills of Himalayas, Madhya Pradesh, Gujarat, Orissa, Assam,
Vindhya mountains, Malabar regions, East West mountain ranges.
(from the research book of Dr.Philo Irudhayanath, titled in Tamil “Kaatil Kanda Marmam”, published in 1985)

 

காட்டு யானையும் வீட்டு நாயும்

டாக்டர். பிலோ இருதயநாத் எழுதி 1985இல் வெளி வந்த “காட்டில் கண்ட மர்மம்” புத்தகத்தில் இருந்து.

“Honey” facts by Dr.Philo

*நாய் தேனை நக்காது.
*சுத்தமான தேனைக் கண்டால் நாய் ஓடிவிடும்.

A dog never licks honey. It would run away if it comes in contact with pure honey.

*கரடி மரம் ஏறி தேன் கூட்டை உடைத்து தேனைக் குடிக்கும். குடித்தபின் போதை உண்டாகி மரத்தின் மேலிருந்து அப்படியே பந்துபோல சுருண்டு கீழே, “தொப்” என்று விழும்.

Tempted by honey, a bear would take all risks to climb a tree, consume it and then intoxicated it falls down with a “thud”.

தேன் குடித்த போதையில் இருக்கும் கரடியை அடித்துக் கொல்வது மிகவும் சுலபம்.

It is said that it is easy to kill a bear intoxicated by honey.

இன்னும் சுவாரசியமான நேரடி ஆய்வுகள், மறைந்த டாக்டர்.பிலோ இருதயநாத் 1980களில் எழுதிய ஆராய்ச்சி நூலான “காட்டில் கண்ட மர்மம்” நூலில் இருந்து.

பிலோ இருதயநாத்: மானுடம் போற்றும் மானுட ஆய்வாளர்

பிலோ இருதயநாத், தனது புத்தகம் ஒன்றில் நரிக்குறவர்கள் பற்றி சுவாரஸ்ய மான சில தகவல்களை எழுதியிருக் கிறார். இந்தியாவில் உள்ள பல்வேறு ஆதிவாசிகளை, நாடோடிகளை நேரில் சென்று சந்தித்து அவர்கள் வாழ்க்கைமுறைகளை ஆராய்ந்து எழுதியவர் பிலோ இருதயநாத்.

ஒரு சைக்கிள், தலையில் தொப்பி, கருப்புக் கண் ணாடி, பாக்ஸ் டைப் கேமரா அணிந்த பிலோ இருதய நாத்தின் தோற்றம் தனித் துவ மானது. தொடக்கப் பள்ளி ஆசிரியரான இருதயநாத், தனது விருப் பத்தின் காரணமாக இந்தியா முழுவ தும் உள்ள பழங்குடி மக்களைத் தேடிச் சென்று ஆராய்ந்து 30-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார். வேடந் தாங்கல் பறவைகள் சரணாலயத்தை உலகறியச் செய்ததில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு.

பிலோ இருதயநாத், தனது கட்டுரை யில் தமிழ் இலக்கியத்தில் வரும் குறவர் கள் வேறு, தமிழகத்தில் வசிக்கும் குறவர்கள் வேறு. இவர்கள் குஜராத்தில் இருந்து தமிழகத்துக்குப் புலம்பெயர்ந்து வந்தவர்கள் எனக் குறிப்பிடுகிறார்.

குறவர்கள் பேசும் மொழியான ‘வாக்ரி போலி’ மொழிக்கு எழுத்து வடிவமே கிடையாது. அது ஹிந்தி, உருது, குஜராத்தி மொழிகளின் கலப்பு எனவும் சுட்டிக் காட்டியுள்ளார்.

குறவர்கள் தங்கள் இனத்துக்குள்ளா கவே திருமணம் செய்துகொள்வார்கள். வெளியாட்கள் குறப் பெண்ணை திருமணம் செய்துகொண்டால், அவளை தங்கள் இனத்துக்குள் சேர்க்க மாட்டார் கள். இனத் தூய்மை பேணுவது அவர்களின் இயல்பு.

குறவர் இனப் பெண்கள் மணவிலக் குப் பெற இயலும். பஞ்சாயத்துக் கூடி இருவருக்கும் உள்ள கருத்து வேறுபாடுகளை நீக்கி, ஒன்றுசேர்க்க முயற்சிப்பார்கள். அது சாத்தியமாகாத நிலையில், ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து வைத்து ஆளுக்கொரு வைக் கோலை எடுத்து, மூன்றாக முறித்து அந்த தண்ணீரில் போடச் செய்வார்கள். அவ்வளவுதான், அவர்களுக்குள்ளான மணஉறவு முறிந்துவிட்டதாக அர்த்தம்!

திருமணத்துக்குப் பிறகு ஒரு வருட காலத்துக்கு ஆண் வீட்டில் பாதிநாளும், பெண் வீட்டில் பாதி நாளும் மணமக்கள் இருக்க வேண்டும். அதன் பிறகு தனியே வாழலாம். நரிக்குறவ மக்கள் பெண் குழந்தை பிறந்தால் கொண் டாடுவார்கள். பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள, மாப்பிள்ளைதான் பெண் ணுக்கு வரதட்சணைத் தர வேண்டும். கல்யாணச் செலவையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மாப்பிள்ளைக்கு சாமி சொத்து இருக்க வேண்டும்.. சாமிச் சொத்து என்பது மூதாதையர்கள் கொடுத்துப் போன சாமிப் பொருட்களாகும். அதா வது, வெள்ளிச் சிலைகள், வழிபாட்டுச் சாமான்கள். இதை புனிதமாக வைத்து பாதுகாத்து வருவார்கள்.

குடிப்பதும், சினிமா பார்ப்பதும் அவர் களின் விருப்பமான பொழுதுபோக்கு கள். தங்களுக்கு என நிறைய கட்டுப்பாடுகள், ஒழுக்கவிதிகளைக் கொண்டவர்கள் அவர்கள். வயதான குறவர்களைப் பராமரிக்க வேண்டியது மகனின் கடமை. இறந்தவர்களை ரகசிய மாக புதைத்துவிட்டு போய்விடுவார்கள் என பிலோ இருதயநாத் குறிப்பிடுகிறார்.

A Tribute to Philo Irudhayanath

Dr. Philo Irudhayanath

A Pioneer Photographer of Tribes, Temples, People and Places 

தமிழகத்தின் முதல் மானுட ஆய்வாளர்.

Philo was a primary school teacher in Chennai who, over a period of 50 years (1940 to 1990), travelled all over south India, often in a bicycle, photographing and writing about Tribes, Temples, People and Places. His photographs and articles run into thousands. He died in 1993 unknown and unsung.