பிலோ இருதயநாத்: மானுடம் போற்றும் மானுட ஆய்வாளர்

பிலோ இருதயநாத், தனது புத்தகம் ஒன்றில் நரிக்குறவர்கள் பற்றி சுவாரஸ்ய மான சில தகவல்களை எழுதியிருக் கிறார். இந்தியாவில் உள்ள பல்வேறு ஆதிவாசிகளை, நாடோடிகளை நேரில் சென்று சந்தித்து அவர்கள் வாழ்க்கைமுறைகளை ஆராய்ந்து எழுதியவர் பிலோ இருதயநாத்.

ஒரு சைக்கிள், தலையில் தொப்பி, கருப்புக் கண் ணாடி, பாக்ஸ் டைப் கேமரா அணிந்த பிலோ இருதய நாத்தின் தோற்றம் தனித் துவ மானது. தொடக்கப் பள்ளி ஆசிரியரான இருதயநாத், தனது விருப் பத்தின் காரணமாக இந்தியா முழுவ தும் உள்ள பழங்குடி மக்களைத் தேடிச் சென்று ஆராய்ந்து 30-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார். வேடந் தாங்கல் பறவைகள் சரணாலயத்தை உலகறியச் செய்ததில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு.

பிலோ இருதயநாத், தனது கட்டுரை யில் தமிழ் இலக்கியத்தில் வரும் குறவர் கள் வேறு, தமிழகத்தில் வசிக்கும் குறவர்கள் வேறு. இவர்கள் குஜராத்தில் இருந்து தமிழகத்துக்குப் புலம்பெயர்ந்து வந்தவர்கள் எனக் குறிப்பிடுகிறார்.

குறவர்கள் பேசும் மொழியான ‘வாக்ரி போலி’ மொழிக்கு எழுத்து வடிவமே கிடையாது. அது ஹிந்தி, உருது, குஜராத்தி மொழிகளின் கலப்பு எனவும் சுட்டிக் காட்டியுள்ளார்.

குறவர்கள் தங்கள் இனத்துக்குள்ளா கவே திருமணம் செய்துகொள்வார்கள். வெளியாட்கள் குறப் பெண்ணை திருமணம் செய்துகொண்டால், அவளை தங்கள் இனத்துக்குள் சேர்க்க மாட்டார் கள். இனத் தூய்மை பேணுவது அவர்களின் இயல்பு.

குறவர் இனப் பெண்கள் மணவிலக் குப் பெற இயலும். பஞ்சாயத்துக் கூடி இருவருக்கும் உள்ள கருத்து வேறுபாடுகளை நீக்கி, ஒன்றுசேர்க்க முயற்சிப்பார்கள். அது சாத்தியமாகாத நிலையில், ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து வைத்து ஆளுக்கொரு வைக் கோலை எடுத்து, மூன்றாக முறித்து அந்த தண்ணீரில் போடச் செய்வார்கள். அவ்வளவுதான், அவர்களுக்குள்ளான மணஉறவு முறிந்துவிட்டதாக அர்த்தம்!

திருமணத்துக்குப் பிறகு ஒரு வருட காலத்துக்கு ஆண் வீட்டில் பாதிநாளும், பெண் வீட்டில் பாதி நாளும் மணமக்கள் இருக்க வேண்டும். அதன் பிறகு தனியே வாழலாம். நரிக்குறவ மக்கள் பெண் குழந்தை பிறந்தால் கொண் டாடுவார்கள். பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள, மாப்பிள்ளைதான் பெண் ணுக்கு வரதட்சணைத் தர வேண்டும். கல்யாணச் செலவையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மாப்பிள்ளைக்கு சாமி சொத்து இருக்க வேண்டும்.. சாமிச் சொத்து என்பது மூதாதையர்கள் கொடுத்துப் போன சாமிப் பொருட்களாகும். அதா வது, வெள்ளிச் சிலைகள், வழிபாட்டுச் சாமான்கள். இதை புனிதமாக வைத்து பாதுகாத்து வருவார்கள்.

குடிப்பதும், சினிமா பார்ப்பதும் அவர் களின் விருப்பமான பொழுதுபோக்கு கள். தங்களுக்கு என நிறைய கட்டுப்பாடுகள், ஒழுக்கவிதிகளைக் கொண்டவர்கள் அவர்கள். வயதான குறவர்களைப் பராமரிக்க வேண்டியது மகனின் கடமை. இறந்தவர்களை ரகசிய மாக புதைத்துவிட்டு போய்விடுவார்கள் என பிலோ இருதயநாத் குறிப்பிடுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *